நாடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நாடு1நாடு2

நாடு1

வினைச்சொல்நாட, நாடி

 • 1

  (ஒருவரை அல்லது ஒன்றை) தேவையை நிறைவேற்றிக்கொள்ள அணுகுதல்; விரும்பித் தேடுதல்.

  ‘அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை நாடுகின்றனர்’
  ‘விலங்குகள் நீர் குடிக்க ஆற்றை நாடின’
  ‘புற்றுநோய் முற்றியபின் மருத்துவரை நாடுவதில் பயனில்லை’

 • 2

  விரும்புதல்.

  ‘பணத்தை நாடாதவர்கள் யார்?’
  ‘பெரியவர் அமைதியை நாடி ஊர்ஊராகத் திரிந்தார்’

 • 3

  (உதவி, தீர்வு போன்றவற்றை எதிர்பார்த்து ஒருவரிடம்) செல்லுதல்.

  ‘தகராறைத் தீர்க்க நீதிமன்றங்களை நாடுவதால் பணச் செலவுதான் ஏற்படும்’
  ‘தங்களை நாடி வந்த புலவர்களுக்கு மன்னர்கள் பொன்னும் பொருளும் அளித்துக் கௌரவித்தனர்’
  ‘உங்களிடம் ஒரு உதவி நாடி வந்திருக்கிறேன்’

நாடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நாடு1நாடு2

நாடு2

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும், வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.

  ‘நாட்டைத் துண்டாட விட மாட்டோம்’
  ‘ஒரு காலத்தில் இந்தியா சிறுசிறு நாடுகளாக இருந்தது’