தமிழ் நார் யின் அர்த்தம்

நார்

பெயர்ச்சொல்

 • 1

  தாவரங்களுக்குத் திடத்தன்மையைத் தரும் திசு/திசுக்களின் தொகுப்பாக அமைந்த இழை.

  ‘மாம்பழம் ஒரே நாராக இருக்கிறது’

 • 2

  (பனை, தென்னை, வாழை முதலியவற்றின்) மட்டையிலிருந்து அல்லது (கற்றாழை முதலியவற்றின்) மடலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இழை.

  ‘வாழை நாரில் பூத்தொடுப்பார்கள்’
  ‘இது தென்னை நாரால் பின்னப்பட்ட கயிறு’