தமிழ் நார்நாராகக் கிழி யின் அர்த்தம்

நார்நாராகக் கிழி

வினைச்சொல்கிழிக்க, கிழித்து

  • 1

    (ஒருவரை அல்லது ஒன்றை) மிகக் கடுமையாக விமர்சித்தல்; திட்டுதல்.

    ‘நகையை அடகு வைத்தது மட்டும் அம்மாவுக்குத் தெரிந்தால் என்னை நார்நாராகக் கிழித்துவிடுவாள்’
    ‘அந்த நடிகரின் புதிய படத்தைப் பத்திரிகைகள் நார்நாராகக் கிழித்துவிட்டன’