தமிழ் நாலு எழுத்து யின் அர்த்தம்

நாலு எழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    (பிறர் மதிக்கத்தக்க அளவிலான) கல்வியறிவு.

    ‘இந்தக் கிராமத்திலேயே நாலு எழுத்து படித்திருக்கும் ஒரே ஆள் என் மகன்தான்’
    ‘நாலு எழுத்து படித்த திமிரில்தான் அவன் இப்படி எதிர்த்துப் பேசுகிறான்’
    ‘நானும் நாலு எழுத்து படித்திருந்தால் இப்படிக் கஷ்டப்பட வேண்டியதில்லை’