தமிழ் நாலு காசு யின் அர்த்தம்

நாலு காசு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (பிறர் தன்னை மதிக்கிற அளவுக்கு அல்லது ஒன்றைத் தனித்து நின்று செய்கிற அளவுக்கு) போதிய பணம்.

  ‘உழைத்து நாலு காசு சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை உனக்கு இல்லையா?’
  ‘கையில் நாலு காசு சேர்ந்துவிட்டது என்ற திமிர்’
  ‘நாலு காசு கிடைக்கும் என்பதால்தானே இவ்வளவு தூரம் சந்தைக்குத் தூக்கிக்கொண்டு வருகிறோம்’
  ‘நாலு காசு சேர்த்துவைத்திருந்தால் இப்போது அவசரத்துக்கு உதவும் இல்லையா?’