தமிழ் நாள் யின் அர்த்தம்

நாள்

பெயர்ச்சொல்

 • 1

  இருபத்து நான்கு மணி நேரம் கொண்ட கால அளவு.

  ‘குழந்தை பிறந்து இரண்டு நாள்தான் ஆகிறது’
  ‘இரண்டொரு நாளில் அவர் ஊருக்குத் திரும்பிவிடுவார்’
  ‘ஒவ்வொரு நாளும் இதே பிரச்சினை என்றால் என்ன செய்வது?’
  ‘இரண்டு நாள் பொறுத்துக்கொள். உனக்குப் பணம் தந்துவிடுகிறேன்’
  ‘திருமணத்திற்கு இன்னும் ஐந்து நாள்தான் இருக்கிறது’

 • 2

  காலம்.

  ‘அந்த நாட்களில் பெற்றோரிடம் எதிர்த்துப் பேச முடியாது’
  ‘எவ்வளவு நாள் நான் உனக்காகக் காத்திருப்பது?’
  ‘நான் வறுமையில் வாடிய நாட்களும் உண்டு’
  ‘நான் அவரைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிறது’
  ‘அவரை நீண்ட நாட்களாக நான் அறிவேன்’

 • 3

  (தொழிற்சாலை, அலுவலகம் முதலியவற்றில்) குறிப்பிட்ட கால அளவு உள்ள பணி நேரம்.

  ‘இந்த வேலையை முடிக்க ஒரு நாள் ஆகிவிட்டது’
  ‘இன்று சனிக்கிழமை; பள்ளிக்கூடம் அரை நாள் மட்டுமே உண்டு’