தமிழ் நிகர யின் அர்த்தம்

நிகர

பெயரடை

 • 1

  (லாபம், வருமானம் போன்றவற்றைக் குறித்து வரும்போது) கழிக்க வேண்டியது, கொடுக்க வேண்டியது போக.

  ‘இந்த வங்கியின் நிகர லாபம் இருநூறு கோடி ரூபாய்’

தமிழ் நிகர் யின் அர்த்தம்

நிகர்

வினைச்சொல்நிகர்க்க, நிகர்த்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஒத்திருத்தல்.

  ‘மானை நிகர்த்த விழி’

தமிழ் நிகர் யின் அர்த்தம்

நிகர்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  இணை; சமம்.

  ‘நகைச்சுவை நடிப்பில் அவருக்கு நிகர் அவரே’
  ‘இரு நாடுகளும் நிகரான வலிமை படைத்தவை’
  ‘இந்த ஊரில் அவருக்கு நிகராகச் செல்வாக்குப் படைத்தவர்கள் யாரும் இல்லை’
  ‘தமிழில் நிகரற்ற புலமை வாய்ந்தவர்’
  ‘அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்ன?’