தமிழ் நிகழ்ச்சி யின் அர்த்தம்

நிகழ்ச்சி

பெயர்ச்சொல்

 • 1

  (திட்டமிடாமல்) நடைபெறும் சம்பவம்.

  ‘நேற்று நடந்த நிகழ்ச்சியை எண்ணிப்பார்த்தேன்’
  ‘உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம்’

 • 2

  திட்டமிட்டு நடத்தப்படும் கூட்டம், மேடை நிகழ்வுகள் போன்றவற்றைக் குறிப்பது.

  ‘நான் இன்னும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால் எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்’
  ‘கல்லூரிக் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற விரும்பும் மாணவ, மாணவியர் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்வது அவசியம்’
  ‘அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதிலும் நான் கலந்துகொள்வதில்லை’
  ‘இந்த நிகழ்ச்சியின் போது அந்த நிறுவனம் தனது புதிய வாகனத்தை அறிமுகம்செய்தது’

 • 3

  தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் ஒளிபரப்பப்படுவது அல்லது ஒலிபரப்பப்படுவது.

  ‘தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றைத் தயாரித்தவர் இவர்’
  ‘உங்கள் வானொலியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை நான் தொடர்ந்து கேட்டுவருகிறேன்’