தமிழ் நிகழ் யின் அர்த்தம்

நிகழ்

வினைச்சொல்நிகழ, நிகழ்ந்து

 • 1

  (முன்னரே திட்டமிடப்படாமல் ஒன்று) நடத்தல்; ஏற்படுதல்; சம்பவித்தல்.

  ‘அந்த விபத்து எப்படி நிகழ்ந்தது?’
  ‘இடைக்காலத்தில் நிகழ்ந்த சில மாற்றங்கள்’
  ‘என் இளமைக் காலத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது’

 • 2

  (காலத்தைக் குறிக்கும்போது) நடத்தல்.

  ‘நிகழும் பார்த்திப ஆண்டு சித்திரைத் திங்கள் 3ஆம் தேதி திருவிழா தொடங்கும்’