தமிழ் நிச்சயம் யின் அர்த்தம்

நிச்சயம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  திடம்; உறுதி.

  ‘அவன்தான் திருடினான் என்பது என்ன நிச்சயம்?’
  ‘வேலை கிடைக்கும் என்ற நிச்சயத்தில் கடன் வாங்கிவிட்டான்’
  ‘அவர் வீட்டில் இருப்பார் என்று நிச்சயமாகக் கூற முடியாது’
  ‘லெமூரியா கண்டம் இருந்ததற்கான நிச்சயமான ஆதாரங்கள் உண்டா?’
  ‘இப்படித் தெளிவான நோக்கங்களோ நிச்சயமான திட்டங்களோ இல்லாத மனிதனை நான் இதுவரை கண்டதே இல்லை’

தமிழ் நிச்சயம் யின் அர்த்தம்

நிச்சயம்

வினையடை

 • 1

  மாற்றத்துக்கு அல்லது சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில்; கட்டாயம்.

  ‘நேரங்கழித்து வீட்டுக்குச் சென்றால் அம்மா நிச்சயம் திட்டுவாள்’
  ‘உனது கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன்’