தமிழ் நிச்சயி யின் அர்த்தம்

நிச்சயி

வினைச்சொல்நிச்சயிக்க, நிச்சயித்து

 • 1

  (ஒரு திருமணம் நடப்பதை) முடிவுசெய்தல்; (மணமகளை, மணமகனை) தேர்ந்தெடுத்து முடிவு செய்தல்.

  ‘நாளைக்கு என் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கிறோம்’
  ‘அவனுக்கு அடுத்த ஊரில் ஒரு பெண்ணை நிச்சயித்திருக்கிறார்கள்’

 • 2

  (ஒன்றைச் செய்யலாம் அல்லது செய்யக் கூடாது என்று) தீர்மானித்தல்; உறுதி கொள்ளுதல்.

  ‘இனிமேல் யாருக்கும் கடன் கொடுப்பதில்லை என்று நிச்சயித்துக்கொண்டார்’
  ‘நாள் தவறாமல் நூலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று கல்லூரியில் சேர்ந்த அன்றே நிச்சயித்துவிட்டான்’