தமிழ் நிஜம் யின் அர்த்தம்

நிஜம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  போலியோ நடிப்போ கற்பனையோ அல்லாதது; உண்மை.

  ‘அவன் விளையாட்டாக அழுததைக் குழந்தை நிஜம் என்று நம்பிவிட்டது’
  ‘சமீபத்தில் வெளிவந்த படத்தில் புரட்சிகரமான பெண்ணாக நடித்திருந்தீர்கள். நீங்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி?’
  ‘நிஜமாகச் சொல்கிறேன் என்னிடம் இருப்பது ஐந்து ரூபாய்தான்’
  ‘அங்கே நடப்பதெல்லாம் நிஜமா அல்லது கனவா என்று தெரியாமல் ஸ்தம்பித்துப்போனார்’
  ‘இந்தப் போருக்கு நிஜமான காரணமே வேறு’

 • 2

  உண்மை.

  ‘நிஜத்தை நிரூபிக்க முடியாமல் தோற்றுவிட்டான்’
  ‘அவன் சொல்வது நிஜம்தான்’
  ‘நிஜத்தைச் சொன்னால் உன்னை விட்டுவிடுவேன்’