தமிழ் நிதானம் யின் அர்த்தம்

நிதானம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (செயல்படுவதில்) பரபரப்போ அவசரமோ இல்லாத நிலை.

  ‘பணத்தைக் காணவில்லையா? நிதானமாகத் தேடிப்பார்’
  ‘குடும்பப் பிரச்சினையைப் பற்றி நிதானமாக யோசி’
  ‘வீட்டின் உள்ளே வந்து நிதானமாகக் கதவைச் சாத்தினார்’
  ‘இவ்வளவு வேகமாகச் சொன்னால் என்னால் எழுத முடியாது. நிதானமாகச் சொல்’

 • 2

  (ஒருவர்) கட்டுப்பாட்டோடு செயல்படும் இயல்பு; சுய உணர்வோடு செயல்படும் விதம்.

  ‘சைக்கிளில் வந்தவர் மாடு ஓடிவந்ததைக் கண்டதும் நிதானம் இழந்து கீழே விழுந்தார்’
  ‘அப்பா கோபத்தில் நிதானம் இழந்து பேசிவிட்டார்’

 • 3

  கூடுதலாகவோ குறைவாகவோ இல்லாத நிலை.

  ‘அடுப்பு நிதானமாக எரிகிறது’
  ‘குழம்புக்கு உப்பு நிதானமாகப் போடு’
  ‘நிதானமான தீயில் உப்புமா அடிபிடிக்காமல் கிளற வேண்டும்’