தமிழ் நிதி யின் அர்த்தம்

நிதி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (குடும்பம், நிறுவனம், நாடு போன்ற அமைப்புகளின்) செலவுகளுக்குத் தேவையான பணம்.

  ‘குடும்பத்தின் நிதி நிலைமை மோசமாக இருந்ததால் என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை’
  ‘இந்தத் திட்டத்திற்குக் கூடுதல் நிதி தேவைப்படும்’
  ‘புதிய வரிகள் நாட்டின் நிதி வசதிகளைப் பெருக்கும்’
  ‘நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசு பல புதிய திட்டங்களை வகுத்துள்ளது’

 • 2

  உயர் வழக்கு மேற்குறித்த பணத்தை நிர்வகிக்கும் அணுகுமுறை அல்லது பொறுப்பு.

  ‘நிதி அமைச்சர்’
  ‘நிதித் துறை’
  ‘நிதிக் கொள்கை’
  ‘நிதிக் குழு’

 • 3

  உயர் வழக்கு (குறிப்பிட்ட நோக்கத்திற்காக) திரட்டப்படும் பணம்.

  ‘வெள்ள நிவாரண நிதி’
  ‘தேர்தல் நிதி’