தமிழ் நிதிநிலை அறிக்கை யின் அர்த்தம்

நிதிநிலை அறிக்கை

பெயர்ச்சொல்

 • 1

  (ஓர் அரசு அல்லது நிறுவனம் தயாரிக்கும்) வரவுசெலவுத் திட்டம்.

  ‘மக்களவையில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது’
  ‘நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டச் செலவுகளுக்கு நிதித்துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும்’
  ‘நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நாளையும் தொடரும்’
  ‘ஒவ்வொரு ஆண்டும் வங்கிகள் தங்களின் நிதிநிலை அறிக்கையை ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும்’