தமிழ் நிதி ஆண்டு யின் அர்த்தம்

நிதி ஆண்டு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாடு தன் வரவுசெலவுத் திட்டத்தை அமல்படுத்தும் (இந்தியாவில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் 31வரையிலான) பன்னிரண்டு மாத காலம்/ஒரு வர்த்தக நிறுவனம் தன் வரவு, செலவு, லாபம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான (இந்தியாவில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் 31வரையிலான) பன்னிரண்டு மாத காலம்.

    ‘2005-2006க்கான நிதி ஆண்டில் ஊரக வளர்ச்சிக்கு அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது’
    ‘வரும் நிதி ஆண்டில் எங்கள் நிறுவனத்தின் விற்பனை 20 சதவீதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது’