தமிழ் நிந்தி யின் அர்த்தம்

நிந்தி

வினைச்சொல்நிந்திக்க, நிந்தித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு அவமானப்படுத்துகிற வகையில் பேசுதல்; தூற்றுதல்; பழித்தல்.

  ‘இந்தப் பாதையை நீ மறித்துக் கட்டினால் ஊரே உன்னை நிந்திக்கும்’
  ‘குருவை நிந்திப்பது தவறு’
  ‘இந்த ராகத்தில் அமைந்துள்ளவை அனைத்தும் நாயகனை நாயகி நிந்திக்கும் பாடல்களாகவே உள்ளன’
  ‘எந்த மதமாக இருந்தாலும் அதை நிந்திப்பது தவறு என்று சட்டம் கூறுகிறது’