தமிழ் நினை யின் அர்த்தம்

நினை

வினைச்சொல்நினைக்க, நினைத்து

 • 1

  (மறந்ததை) ஞாபகத்துக்குக் கொண்டுவருதல்.

  ‘என்னைப் பற்றி எப்போதாவது நினைப்பது உண்டா?’

 • 2

  (நடந்ததை) எண்ணுதல்.

  ‘என்னைப் படிக்கவைப்பதற்காக என் தாய் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்த்தால் மனம் நெகிழ்கிறது’

 • 3

  ஒன்று நடக்க வேண்டும் என்று விரும்புதல் அல்லது ஒன்று எதிர்பார்த்தபடி நடக்கும் என்று நம்புதல்.

  ‘உன்னை நிறையப் படிக்கவைக்க வேண்டும் என்று நினைத்தோம்’
  ‘பிள்ளையாருக்குப் பூஜை செய்தால் மழை வரும் என்று நினைக்கிறார்கள்’

 • 4

  மனத்தில் அனுமானித்தல்.

  ‘உனக்கு இந்த வேலை கிடைக்கும் என்று நினைத்தேன்; அதுபோலவே கிடைத்துவிட்டது’

 • 5

  (ஒன்றைச் செய்து முடிக்கவோ ஒன்று நிறைவேறவோ) அக்கறை அல்லது ஈடுபாடு காட்டுதல்; மனம்வைத்தல்.

  ‘நீங்கள் நினைத்தால் இந்த வேலையை எனக்கு வாங்கித்தர முடியும்’
  ‘நான் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்வேன்’