தமிழ் நினைவு யின் அர்த்தம்

நினைவு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி) மனத்தில் தங்கியிருக்கும் பதிவுகள்; ஞாபகம்.

  ‘உங்களை எங்கோ பார்த்ததாக நினைவு’
  ‘என்னிடம் பணம் வாங்கியது உனக்கு நினைவு இல்லையா?’
  ‘உனக்கு எப்போதும் பிறந்த வீட்டு நினைவுதானா?’
  ‘அவளுடைய அழகிய முகம் நினைவிற்கு வந்தது’
  ‘தேசியத் தலைவரின் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்படும்’

 • 2

  மனத்தில் ஒன்றைப் பதிவாக இருத்திக்கொள்ளும் இடம்.

  ‘நான் சொல்வதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்’
  ‘அவர் சொன்னது எதுவும் இப்போது என் நினைவில் இல்லை’

 • 3

  சுய உணர்வு; பிரக்ஞை.

  ‘பெரியவர் நினைவு இல்லாமல் கிடக்கிறார்’