தமிழ் நினைவுகூர் யின் அர்த்தம்

நினைவுகூர்

வினைச்சொல்-கூர, -கூர்ந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பழைய நிகழ்ச்சியை) நினைவுக்குக் கொண்டு வருதல்; ஞாபகப்படுத்திக்கொள்ளுதல்.

    ‘தலைவர் தன் இளமைக் காலத்தை நினைவுகூர்ந்தார்’
    ‘காந்திஜியைச் சந்தித்தது என் வாழ்க்கையில் என்றும் நினைவுகூரத்தக்க அனுபவம்’