தமிழ் நிம்மதி யின் அர்த்தம்

நிம்மதி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கவலை இல்லாத நிலை; மன அமைதி; ஆசுவாசம்.

  ‘கல்லூரியில் இடம் கிடைத்தால்தான் நிம்மதி’
  ‘நிம்மதியைத் தேடி எங்கும் போக வேண்டாம்’
  ‘நிம்மதியான வாழ்க்கை’

 • 2

  இடையூறு இல்லாமை.

  ‘நிம்மதியான பயணம்’
  ‘நேற்று இரவுதான் நிம்மதியாகத் தூங்கினேன்’