நிமிண்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிமிண்டு1நிமிண்டு2

நிமிண்டு1

வினைச்சொல்நிமிண்ட, நிமிண்டி

 • 1

  கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே ஒன்றைப் பிடித்து அழுத்தி முன்பின் அசைத்தல்.

  ‘குழந்தையின் கன்னத்தை நிமிண்டக் கை குறுகுறுத்தது’
  ‘விளக்குத் திரியை நிமிண்டினாள்’

நிமிண்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிமிண்டு1நிமிண்டு2

நிமிண்டு2

வினைச்சொல்நிமிண்ட, நிமிண்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு பிறர் அறியாமல் சாமர்த்தியமாக எடுத்துக் கொண்டு செல்லுதல்.

  ‘இவன்மீது ஒரு கண் வைத்திரு. புத்தகங்களை நிமிண்டிக்கொண்டு போய்விடுவான்’