தமிழ் நிமிர் யின் அர்த்தம்

நிமிர்

வினைச்சொல்நிமிர, நிமிர்ந்து

 • 1

  (தலை, உடல் ஆகியவை குனிந்த நிலையிலிருந்து) உயர்தல்.

  ‘சாப்பிடுவதை நிறுத்திவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார்’
  ‘நிமிர்ந்த நடை’
  ‘தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தான்’
  ‘நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து உட்கார்’
  ‘செய்தியைக் கேட்டதும் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்’
  ‘சட்டென்று குனிந்து நிமிர்ந்ததில் இடுப்பு பிடித்துக் கொண்டது’
  உரு வழக்கு ‘என்னுடைய பெண் வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகுதான் குடும்பம் நிமிர்ந்திருக்கிறது’