தமிழ் நியதி யின் அர்த்தம்

நியதி

பெயர்ச்சொல்

  • 1

    (இயற்கையாக அமைந்த அல்லது உருவாக்கிய) முறையான செயல்பாடு; ஒழுங்குமுறை.

    ‘பிறப்பு, இறப்பு என்பவை இயற்கையின் நியதிகள்’
    ‘காலத்துக்கு ஏற்ப நியதிகளும் மாறுகின்றன’
    ‘உறுப்பினர் ஆகிவிட்டால் கட்சி நியதிகளுக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும்’