தமிழ் நியமனம் யின் அர்த்தம்

நியமனம்

பெயர்ச்சொல்

 • 1

  அதிகாரபூர்வமாகப் பணியில் அமர்த்தும் அல்லது ஈடுபடுத்தும் செயல்.

  ‘சத்துணவுத் திட்ட அமைப்பாளர்களாக இருநூறு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’
  ‘மின் வாரியத் தலைவர் நியமனத்தைப் பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’
  ‘வேலைக்கான நியமனக் கடிதம் வந்துள்ளது’

 • 2

  ஒரு பொறுப்புக்கு நேரடியாக ஒருவரை அமர்த்தும் முறை.

  ‘நியமன உறுப்பினர்’
  ‘மேலவை உறுப்பினர் நியமனம்’

 • 3

  (ஒருவர் தனக்குப் பதிலாகச் செயல்பட மற்றொருவரை) அமர்த்தும் முறை.

  ‘வருடாந்திரக் கூட்டத்தில் உங்களுக்கு பதில் மற்றொருவரை நியமனம் செய்யலாம்’