தமிழ் நியமி யின் அர்த்தம்

நியமி

வினைச்சொல்நியமிக்க, நியமித்து

 • 1

  அதிகாரபூர்வமாகப் பணியில் அமர்த்துதல் அல்லது ஈடுபடுத்துதல்.

  ‘அரசு புதிதாகச் சில வாரியத் தலைவர்களை நியமித்துள்ளது’
  ‘தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசு ஓர் ஆலோசனைக் குழுவை நியமிக்கும்’
  ‘சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைக் கண்காணிக்க அரசு அதிகாரிகளை நியமித்துள்ளது’

 • 2

  (உறுப்பினரை நேரடியாக) நியமனம்செய்தல்.

  ‘மேலவைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்’

 • 3

  (தன் சார்பாக ஒருவரை) நியமனம்செய்தல்.

  ‘பங்குதாரர் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தன் நண்பர் ஒருவரை நியமித்தார்’