தமிழ் நியாயம் யின் அர்த்தம்

நியாயம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (சமூக, தார்மீக அல்லது காரணகாரியத் தொடர்பின் அடிப்படையில்) ஒத்துக்கொள்ளும்படியானது; சரியானது; முறையானது.

  ‘இந்தச் சின்ன வேலைக்கு இவ்வளவு கூலி கேட்பது நியாயமா?’
  ‘இங்கே பெரியவர்களுக்கு ஒரு நியாயம், சிறியவர்களுக்கு ஒரு நியாயம் என்று கிடையாது’
  ‘பிரச்சினை தீர்ந்த பிறகும் போராட்டத்தைத் தொடர்வதில் எந்த வித நியாயமும் இல்லை’

 • 2

  (குறிப்பிட்ட சூழலில் ஒன்று) இயல்பானது.

  ‘என் குழந்தையின் நியாயமான ஆசைகளுக்கு நான் தடைபோட மாட்டேன்’
  ‘அரசின் நிதிநிலைமை மோசமாக இருக்கும் சூழலில் இந்தப் புதிய திட்டம் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வி பிறப்பது நியாயமே’

 • 3

  நீதி.

  ‘காவல் நிலையத்தில் எழுத்துமூலம் புகார் தந்து நியாயம் கோரினேன்’

 • 4

  தரத்துக்கோ வசதிக்கோ ஏற்றதாக இருப்பது.

  ‘எங்களிடம் பட்டுச் சேலைகள் நியாயமான விலையில் கிடைக்கும்’
  ‘இந்தக் காலத்திலும் நியாயமான வாடகை வாங்கும் வீட்டுக்காரர்களும் இருக்கிறார்கள்’

தமிழ் நியாயம் யின் அர்த்தம்

நியாயம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

தத்துவம்
 • 1

  தத்துவம்
  பொருள்களின் தன்மையை உணர்வதற்குக் கண்களால் உணர்தல், அனுமானம், முன்னோர் சொன்ன உரை, ஒப்புமை ஆகிய நான்கு வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட, தர்க்க சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் தத்துவ மரபின் தரிசனங்களில் ஒன்று.