தமிழ் நிர்ணயம் யின் அர்த்தம்

நிர்ணயம்

பெயர்ச்சொல்

 • 1

  (விலை, தரம் போன்றவற்றைக் குறிக்கும்போது) வரையறை செய்யும் செயல்.

  ‘நெல்லின் கொள்முதல் விலையை அரசு நிர்ணயம் செய்துள்ளது’
  ‘வரி நிர்ணயத்துக்குச் சரியான அளவுகோல் பின்பற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின’
  ‘விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலி நிர்ணயம்’
  ‘தமிழ்நாட்டில் பொது நூலகங்களுக்காக வாங்கும் புத்தகங்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்கிறது’