தமிழ் நிர்ணயி யின் அர்த்தம்

நிர்ணயி

வினைச்சொல்நிர்ணயிக்க, நிர்ணயித்து

 • 1

  (அளவு, எல்லை, தன்மை முதலியவற்றை) வரையறை செய்தல்.

  ‘மத்திய அரசு ஊழியர்களுக்குச் சமமாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன’
  ‘அரசு நிர்ணயித்துள்ள கால உச்சவரம்புக்குள் பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்’
  ‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டை நிர்ணயிக்கப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன’

 • 2

  தீர்மானித்தல்.

  ‘ஒரு புத்தகத்தின் விலையை நிர்ணயிக்கும்போது தாள், அச்சுக் கூலி போன்றவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் போதாது’
  ‘உறுதியான சாட்சிகள் இல்லாமல் குற்றத்தை நிர்ணயிக்க முடியாது’
  ‘ஒரு அணி எடுத்த புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது’