தமிழ் நிரந்தரம் யின் அர்த்தம்

நிரந்தரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  நிலைத்து அல்லது நீடித்து இருக்கும் தன்மை; தொடர்ந்து இருப்பது.

  ‘நிரந்தர வருமானம்’
  ‘குடிநீர்ப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்’
  ‘இந்த வேலை நிரந்தரம் அல்ல’
  ‘நான் நிரந்தரமாக இந்த ஊரில் தங்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன்’
  ‘ஒரு சின்னச் சண்டை நிரந்தரமான பிரிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது’