தமிழ் நிர்ப்பந்தம் யின் அர்த்தம்

நிர்ப்பந்தம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  ஒன்றைச் செய்தே ஆக வேண்டிய நிலை; கட்டாயம்.

  ‘படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது’
  ‘அப்பாவின் நிர்ப்பந்தத்தால் இந்த வேலையில் சேர்ந்தேன்’
  ‘தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் இணங்கியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது’
  ‘நிர்ப்பந்தமான சூழலில் வேலை செய்வது மிகவும் கடினம்’

 • 2

  விடுபட முடியாத சிரமங்களும் துன்பங்களும் நிறைந்த நிலை.

  ‘வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களில் சிக்கித் தவிக்கிறேன்’