தமிழ் நிரம்பு யின் அர்த்தம்

நிரம்பு

வினைச்சொல்நிரம்ப, நிரம்பி

 • 1

  (ஒன்று) கொள்ளும் அளவுக்கு நிறைதல்.

  ‘குளத்தில் தண்ணீர் நிரம்பியிருக்கிறது’

 • 2

  பேச்சு வழக்கு (வயது) நிறைதல்; பூர்த்தியாதல்; முழுமையடைதல்.

  ‘இன்றோடு குழந்தைக்கு மூன்று வயது நிரம்புகிறது’
  ‘அவளுக்கு இன்னும் பதினைந்து வயது நிரம்பவில்லை’

 • 3

  அதிக அளவில் இடம்பெறுதல்.

  ‘ஆங்கிலச் சொற்கள் நிரம்பியிருக்கும் கதை’