தமிழ் நிரூபி யின் அர்த்தம்

நிரூபி

வினைச்சொல்நிரூபிக்க, நிரூபித்து

  • 1

    (சான்று, பரிசோதனை, செயல்பாடு முதலியவை மூலமாக) உண்மையை மெய்ப்பித்தல்; நிறுவுதல்.

    ‘அவன் குற்றவாளி என்பதை உன்னால் நிரூபிக்க முடியுமா?’
    ‘புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்பது பரிசோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது’
    ‘சமன்பாட்டில் x = 3 என்பதை நிரூபி’