தமிழ் நிறம் யின் அர்த்தம்

நிறம்

பெயர்ச்சொல்

  • 1

    இயற்கையாக அமைந்து அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டு ஒளியின் மூலம் கண்ணுக்குத் தெரியும் கறுப்பு, மஞ்சள், சிவப்பு போன்றவற்றின் பொதுப்பெயர்; வண்ணம்.

    ‘பிராணிகளால் மனிதர்களைப் போல் நிற வேறுபாடுகளை அறிய முடியுமா என்பதைக் குறித்து ஆய்வு நடந்துவருகிறது’

  • 2

    பேச்சு வழக்கு (சருமம்) கறுப்பாக அல்லது சிவப்பாகக் காணப்படும் நிலை.

    ‘மாப்பிள்ளை என்ன நிறம்?’