தமிழ் நிறு யின் அர்த்தம்

நிறு

வினைச்சொல்நிறுக்க, நிறுத்து

  • 1

    (பொருளை எடை பார்க்கும் இயந்திரத்தில் வைத்து) எடையைக் கணக்கிடுதல்; எடைபோடுதல்.

    ‘வைரத்தை நிறுக்க ‘காரட்டு’ என்ற அளவைப் பயன்படுத்துகிறார்கள்’
    ‘‘கழஞ்சு’ என்பது பழங்காலத்தில் பொன் நிறுக்கப் பயன்படுத்தப்பட்ட அளவைகளில் ஒன்று’
    ‘நகரங்களில் மாம்பழங்களை நிறுத்துத்தான் விற்கிறார்கள்’