தமிழ் நிறுவு யின் அர்த்தம்

நிறுவு

வினைச்சொல்நிறுவ, நிறுவி

 • 1

  (பத்திரிகை, கட்சி, அமைப்பு முதலியவற்றை) தொடங்குதல்.

  ‘இந்தப் பத்திரிகையை நிறுவியவர் எங்கள் தந்தை’
  ‘தன் தந்தையின் நினைவாக அறக்கட்டளை ஒன்றை அவர் நிறுவியுள்ளார்’
  ‘இந்த விசாரணைக் குழு எதற்காக நிறுவப்பட்டது என்று நினைவிருக்கிறதா?’

 • 2

  (கட்டடம், அலங்கார வளைவு முதலியவற்றை ஓர் இடத்தில்) உருவாக்குதல்; எழுப்புதல்.

  ‘இங்கே நிறுவப்படப்போகிற பல்கலைக்கழகக் கட்டடத்தின் மாதிரித் தோற்றம் இதுதான்’
  ‘தலைவரின் வருகையை ஒட்டிச் சாலையெங்கும் அலங்கார வளைவுகள் நிறுவப்பட்டுள்ளன’
  ‘அவருடைய ஆட்சிக் காலத்தில் பல கல்லூரிகள் நிறுவப்பட்டன’

 • 3

  (இயந்திரம், சிலை முதலியவற்றைக் கொண்டுவந்து ஓர் இடத்தில்) பொருத்துதல்; அமைத்தல்.

  ‘விடுதலைப் போராட்ட வீரர் நினைவாக அவருடைய சிலை நிறுவப்படும்’
  ‘தொழிற்சாலை நிர்வாகம் நச்சு நீக்கும் சாதனத்தை நிறுவ ஒப்புக்கொண்டுள்ளது’

 • 4

  (ஒரு கருத்தைத் தக்க ஆதாரங்களுடன்) நிலைநாட்டுதல்; வலியுறுத்துதல்.

  ‘‘பல்லவர் காலத்தில் தமிழகத்தில் கலைகள் சிறந்திருந்தன’ என்பதை நிறுவுக’
  ‘அவர் தன் கருத்தைப் பிறர் மறுக்க முடியாதபடி நிறுவுவதில் வல்லவர்’