நிறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிறை1நிறை2நிறை3நிறை4

நிறை1

வினைச்சொல்நிறைய, நிறைந்து, நிறைக்க, நிறைத்து

 • 1

  நிரம்புதல்.

  ‘மழை பெய்தால் அல்லவா குளம் நிறையும்?’
  ‘வயிறு நிறைந்துவிட்டது; இனி மேல் எதுவும் சாப்பிட முடியாது’

 • 2

  (குறிப்பிட்ட வயது) முடிதல்.

  ‘இந்த வருடம் அவனுக்கு எட்டு வயது நிறைகிறது’

நிறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிறை1நிறை2நிறை3நிறை4

நிறை2

வினைச்சொல்நிறைய, நிறைந்து, நிறைக்க, நிறைத்து

 • 1

  நிரப்புதல்.

  ‘பாத்திரங்களில் நீரை நிறைத்து வைத்தாள்’
  உரு வழக்கு ‘இனிய நினைவுகள் நெஞ்சை நிறைத்தன’

நிறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிறை1நிறை2நிறை3நிறை4

நிறை3

பெயர்ச்சொல்

 • 1

  எடை.

  ‘தன்னுடைய நிறையைவிட இரண்டு பங்கு அதிகம் இருக்கும் பளுவை எளிதாகத் தூக்கினார்’
  ‘அணுவின் நிறை’

நிறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிறை1நிறை2நிறை3நிறை4

நிறை4

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஒருவரிடம் அல்லது ஒன்றில் காணப்படும்) சிறப்புத் தன்மை.

  ‘வேட்பாளரின் குறைகளையும் நிறைகளையும் வாக்காளர்கள் அறிந்து வாக்களிக்க வேண்டும்’
  ‘உனக்கு வேண்டியவர் என்பதால் அவருடைய நிறைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’