நிறைய -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிறைய1நிறைய2

நிறைய1

வினையடை

 • 1

  (எண்ணிக்கையில் அல்லது அளவில்) அதிகமாக.

  ‘கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள்பற்றி அவர் நிறையப் பேசினார்’
  ‘மேலைநாட்டுத் தத்துவங்களை எல்லாம் நான் நிறையப் படித்திருக்கிறேன்’

 • 2

  (குறிப்பிடப்படும் ஒன்றில்) முழுவதும்.

  ‘தொட்டி நிறையத் தண்ணீர்’
  ‘அவள் கழுத்து நிறைய நகை போட்டிருந்தாள்’
  ‘திரையரங்கம் நிறையக் கூட்டம் நிரம்பி வழிந்தது’

நிறைய -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிறைய1நிறைய2

நிறைய2

பெயரடை

 • 1

  அதிகமான; பல.

  ‘என் சந்தேகத்தை நிறைய பேரிடம் கேட்டுவிட்டேன்’
  ‘இந்தியாவில் நிறைய நகரங்களில் நிலத்தடி நீர் அபாயகரமான அளவில் மாசடைந்துள்ளது’