தமிழ் நிறைவு யின் அர்த்தம்

நிறைவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒரு செயல், நிகழ்வு போன்றவை) முடிவடையும் நிலை.

  ‘சென்னையில் ஒரு வார காலமாக நடைபெற்று வந்த திரைப்பட விழாவின் நிறைவில் ஒரு வங்காள மொழிப் படம் திரையிடப்பட்டது’
  ‘புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாள்’

 • 2

  திருப்தி; மனநிறைவு.

  ‘பாடுபட்டதற்கான பலன் கிடைத்துவிட்ட நிறைவு அவர் முகத்தில் தெரிந்தது’
  ‘வாரத்தில் ஒரு நாளாவது கோயிலுக்குச் சென்று வருவது மனத்திற்கு நிறைவான உணர்வைத் தருகிறது’
  ‘திருமண ஏற்பாடுகள் நிறைவாக அமைந்திருந்தன’
  ‘வாழ்க்கையை முழுமையாக அனுபவித்த நிறைவு’
  ‘ஏதோ நல்லது செய்திருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் மனத்தில் ஒரு நிறைவு ஏற்படுகிறது’