தமிழ் நிறைவுபெறு யின் அர்த்தம்

நிறைவுபெறு

வினைச்சொல்-பெற, -பெற்று

 • 1

  முடிவடைதல்.

  ‘மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது’
  ‘மத்யமாவதி ராகத்தில் அமைந்த பாடலுடன் கச்சேரி நிறைவுபெற்றது’

 • 2

  (தேவை, நோக்கம் போன்றவை) நிறைவேறுதல்.

  ‘நமது தேவைகள் நிறைவுபெறுவதற்காக நாம் போராட வேண்டும்’