தமிழ் நிறைவேற்று யின் அர்த்தம்

நிறைவேற்று

வினைச்சொல்நிறைவேற்ற, நிறைவேற்றி

 • 1

  (திட்டம், பணி போன்றவற்றால்) பயன் கிடைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

  ‘இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஏராளமாகச் செலவாகும்’
  ‘சாலை அமைக்கும் பணி நிறைவேற்றப்பட்டது’

 • 2

  (கோரிக்கை, வாக்குறுதி போன்றவற்றை) செயல்படுத்துதல்.

  ‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறை யாருக்கு இருக்கிறது?’
  ‘எங்கள் கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றும்வரை போராடுவோம்’

 • 3

  (கடமையை, வேலையை) செய்தல்; நிகழ்த்துதல்.

  ‘அரசு அலுவலர் ஒருவர் தன் கடமையை நிறைவேற்ற விடாமல் தடுப்பது குற்றம் ஆகும்’