தமிழ் நிறைவேறு யின் அர்த்தம்

நிறைவேறு

வினைச்சொல்நிறைவேற, நிறைவேறி

 • 1

  (மேற்கொண்ட நடவடிக்கையால் ஒன்று) முழுமை அடைதல்.

  ‘இந்தத் திட்டங்கள் நிறைவேற மூன்றாண்டு காலம் ஆகும்’

 • 2

  (இலட்சியம், கோரிக்கை போன்றவை) கைகூடுதல்.

  ‘எனது இலட்சியம் நிறைவேறும்வரை போராடுவேன்’
  ‘உன்னுடைய ஆசைகள் நிறைவேறும் காலம் வந்துவிட்டது’

 • 3

  (கடமை) செய்யப்பட்டு முடிதல்.

  ‘என் கடமை நிறைவேறியது. இனி என் பொறுப்பும் விட்டது’

 • 4

  (ஒரு அவையில் தீர்மானம், மசோதா முதலியவை பெரும்பான்மை உறுப்பினர்களின்) அங்கீகாரம் பெறுதல்.

  ‘பொறியியல் கல்லூரிச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்துசெய்யும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது’