தமிழ் நிலம் யின் அர்த்தம்

நிலம்

பெயர்ச்சொல்

 • 1

  பயிர்செய்யும் இடம்.

  ‘இவை நம் நிலத்தில் விளைந்தவை’
  ‘வறட்சியின் காரணமாக நிலம் வெடித்துக்கிடந்தது’

 • 2

  பூமியின் மேல்பரப்பு; தரை.

  ‘நீரிலிருந்து மீனை எடுத்து நிலத்தில் போட்டான்’
  ‘நிலத்தைத் தோண்டியபோது புதையல் கிடைத்தது’

 • 3

  (பழந்தமிழ் இலக்கியத்தில்) (மலை, கடல், காடு போன்ற) இயற்கைச் சூழலைக் கொண்டு பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு.

  ‘குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து வகை நிலங்களில் வாழ்ந்தவர்களின் தொழில்கள் வேறுவேறானவை’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு (கட்டடம் போன்றவற்றின்) தரை.

  ‘எங்கள் வீட்டில் கதிரை இல்லை; நிலத்தில்தான் இருக்க வேண்டும்’
  ‘எனக்கு நிலத்திலிருந்து சாப்பிட்டுத்தான் பழக்கம்’
  ‘நிலத்தில் படுக்காதே’