தமிழ் நிலவரம் யின் அர்த்தம்

நிலவரம்

பெயர்ச்சொல்

 • 1

  (நாடு, வீடு முதலியவற்றின்) நடப்பு நிலை; சூழ்நிலை.

  ‘நாட்டு நிலவரம் தெரியாத கிணற்றுத்தவளையாக இருக்கிறாயே’
  ‘வீட்டு நிலவரம் நன்றாக இருந்திருந்தால் மகனை மேல்படிப்புக்கு அனுப்பியிருப்பேன்’
  ‘தேர்தல் நிலவரத்தை அறிந்துகொள்ள மத்திய அமைச்சர் வந்திருந்தார்’

 • 2

  (விற்பனை, அளவு முதலியவற்றின்) போக்கு அல்லது நிலைமை.

  ‘நேற்றைய நிலவரப்படி அணையில் நீர்மட்டம் 18.2 அடியாக இருந்தது’
  ‘போன மாத நிலவரப்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ஆயிரம் ரூபாயாக இருந்தது’