நிலவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிலவு1நிலவு2

நிலவு1

வினைச்சொல்நிலவ, நிலவி

 • 1

  (குறிப்பிட்ட காலத்தில் அல்லது சூழலில் அல்லது இடத்தில்) ஒன்று அறியக்கூடிய வகையில் காணப்படுதல்.

  ‘பருவ மழை பெய்யாமல் நாட்டில் வறட்சி நிலவுகிறது’
  ‘சுமார் முப்பது நிமிடங்களுக்கு அவையில் குழப்பம் நிலவியது’
  ‘இயற்கை வழிபாடு புராதன காலத்திலிருந்து தமிழ்நாட்டில் நிலவிவருகிறது’
  ‘சிறிது நேரம் இருவரிடையே மௌனம் நிலவியது’
  ‘மக்களிடம் நிலவும் பல்வேறு நம்பிக்கைகளைப் பற்றி நான் ஆய்வு செய்துவருகிறேன்’
  ‘மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் அமைதி நிலவ வேண்டும்’
  ‘சலனமற்ற அந்த முகத்தில் சாந்தம் நிலவியது’
  ‘தமிழ்நாட்டில் நிலவிய மொழி, கலை, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் முதலியவற்றைப் பற்றிய செய்திகளைத் திருக்கோயில் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது’
  ‘குண்டு வெடித்த பகுதியில் பதற்றம் நிலவியது’

 • 2

  அமைதல்; ஏற்படுதல்.

  ‘எல்லா நாடுகளிலும் மக்களாட்சி நிலவ வேண்டும்’

நிலவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிலவு1நிலவு2

நிலவு2

பெயர்ச்சொல்

 • 1

  சந்திரன்.

  ‘நிலவில் மனிதன் காலடி எடுத்துவைத்த நாள் வரலாற்றில் முக்கியமானது ஆகும்’