தமிழ் நிலுவை யின் அர்த்தம்

நிலுவை

பெயர்ச்சொல்

 • 1

  (வர வேண்டிய தொகையில், கடனில்) பாக்கி.

  ‘நிலுவை இல்லாமல் வரி செலுத்தியவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்’
  ‘வசூலாகாமல் நிலுவையாக இருக்கும் வரித் தொகை பல கோடிகள் ஆகும்’
  ‘நிவாரணத் தொகையின் மீதியை அரசு நிலுவையில் வைத்திருக்கிறது’
  ‘நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரில் கொஞ்சம் நிலுவை உள்ளது’

 • 2

  (திட்டம், வழக்கு போன்றவற்றில்) உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலை.

  ‘நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாகத் தீர்க்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது’
  ‘நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்’