தமிழ் நிலைகொள் யின் அர்த்தம்

நிலைகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (ஓர் இடத்தில்) நிலையாக இருத்தல்.

  ‘செயற்கைக்கோள் இன்னும் ஒரு வாரத்தில் தனக்கு உரிய சுற்றுப்பாதையில் நிலைகொள்ளும்’
  ‘சென்னைக்கு 250 கி.மீ. தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒன்று நிலை கொண்டுள்ளது’
  ‘கொட்டிலில் பசு நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தது’

 • 2

  (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) இயல்பாகவும் கட்டுப்பாட்டை இழக்காமலும் இருத்தல்.

  ‘இரவு மணி ஒன்றாகியும் கணவன் வராததால் அவள் நிலைகொள்ளாமல் தவித்தாள்’
  ‘தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை அறிந்த பின்னர் அவனுக்கு நிலைகொள்ளவில்லை’
  ‘தேர்வில் வெற்றி கிடைத்ததும் அவன் நிலைகொள்ளாத சந்தோஷத்தில் திளைத்தான்’