தமிழ் நிலைநிறுத்து யின் அர்த்தம்

நிலைநிறுத்து

வினைச்சொல்-நிறுத்த, -நிறுத்தி

 • 1

  (ஓர் இடத்தில் ஒன்றை) நிலையாக இருக்கச்செய்தல்.

  ‘செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த ஏவுகலம் உதவுகிறது’
  ‘விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் திங்கட்கிழமை புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது’

 • 2

  (குடும்பம், நிறுவனம் போன்றவற்றை) நல்ல நிலைக்குக் கொண்டு வந்து நிலைத்து இருக்கும்படி செய்தல்.

  ‘நான் வேலைக்குப் போய்த்தான் இந்தக் குடும்பத்தை நிலைநிறுத்த வேண்டும்’
  ‘சிறப்பான நிர்வாகம்தான் அந்தப் பத்திரிகையை இன்றுவரை ஒரு நிறுவனமாக நிலைநிறுத்தியுள்ளது’

 • 3

  (ஒரு நிலைமை, தன்மை போன்றவை ஒன்றில்) நிலைத்து இருக்கும்படியோ வலுவடையும்படியோ செய்தல்.

  ‘கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறையைக் குறைத்துக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த காவல்துறை முயன்றுவருகிறது’
  ‘ஆங்கிலேயரின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதே அந்தப் படையெடுப்பின் நோக்கமாக இருந்தது’
  ‘சில பயிர்களில் தழைச்சத்தை நிலைநிறுத்துவதற்கு வேர்முடிச்சுகளில் உள்ள பாக்டீரியாக்கள் உதவுகின்றன’
  ‘வண்டல் மண் நிலத்தில் செழிப்பை நிலைநிறுத்துகிறது’