தமிழ் நிலைப்படுத்து யின் அர்த்தம்

நிலைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  ஒன்றில் ஏதேனும் ஒரு சத்துப் பொருள் குறிப்பிட்ட அளவு இருக்குமாறு செய்தல்.

  ‘நிலைப்படுத்தப்பட்ட பால்’
  ‘பயிர்களில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் ஆற்றல் கருநீலக் கடற்பாசிக்கு உண்டு’

 • 2

  (விலை) ஒரே சீராக இருக்குமாறு செய்தல்.

  ‘அறுவடை காலங்களில் நெல்லின் விலையை நிலைப்படுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்’