தமிழ் நிலைபேறு யின் அர்த்தம்

நிலைபேறு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நிலைக்கும் தன்மை; சாசுவதம்.

  ‘செல்வம் நிலைபேறுடையது அல்ல என்றனர் ஞானிகள்’

 • 2

  உயர் வழக்கு (மொழியைக் குறித்து வரும்போது) தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால் நிலையாக ஏற்றுக்கொள்ளப்படும் தன்மை.

  ‘கிளைமொழியில் ஏதேனும் ஒன்று நிலைபேறு அடையும் வாய்ப்பு உண்டு’
  ‘நிலைபேறு பெற்ற உயர்வழக்கு எழுத்திலும், பேச்சுவழக்கு இயல்பான சூழல்களிலும் பயன்படுத்தப்படுகிறது’
  ‘ஒரு மொழியில் விதிக்குப் புறம்பாக உள்ள சில கூறுகள் காலப் போக்கில் நிலைபேறு அடையக்கூடும்’